Skip to main content

புதினா (Mentha spicata) health tips

   புதினா (Mentha spicata) health tips 


புதினா (Mentha spicata) ஒரு  மூலிகை. ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் பலவிதங்களில், பயன் படுத்துவீர்கள்.




* புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட் ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்ட மின்-ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ பிளோவின், தயாமின் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளன.

சட்னி, ஜூஸ் என எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங் கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம். 

அவை உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில்செரிமானமாக்குகிறது.



* ரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியை தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீரவும் புதினா உதவுகின்றது.



* வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்று கின்றது.புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட் டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமா வையும் புதினாக் கீரை கட் டுப்படுத்தும்.


* மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும்,வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாறை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்

  படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்? எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம். மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிகமுக்கியமானது. நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். உடலைச்சுற்றும் இரு காந்தவளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின்பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது. காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் தி...